தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும், தஞ்சைப் பெரிய கோயில் என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சோழ நாடு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் மாமன்னர் முதலாம் இராஜராஜ சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார். 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன. இக்கோயில் தமிழகத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
Brihadishvara temple is a Hindu temple dedicated to Shiva located in Thanjavur, Tamil Nadu, India. It is one of the largest South Indian temples and an exemplary example of a fully realized Dravidian architecture. Built by Tamil king Raja Raja Chola between 1003 and 1010 AD, the temple is a part of the UNESCO World Heritage Site. The original monuments of this 11th century temple were built around a moat. It included gopura, the main temple, its massive tower, inscriptions, frescoes and sculptures predominantly related to Shaivism, but also of Vaishnavism and Shaktism traditions of Hinduism. The complex includes shrines for Nandi, Parvati, Kartikeya, Ganesha, Sabhapati, Dakshinamurti, Chandeshvara, Varahi and others. The temple is one of the most visited tourist attractions in Tamil Nadu.
No comments:
Post a Comment